ETV Bharat / state

பால் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து - தொழிலாளி பலி - பாய்லர் வெடித்து தொழிலாளி பலி

பால் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் கூலித் தொழிலாளி பலியான சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாய்லர் வெடித்து விபத்து
பாய்லர் வெடித்து விபத்து
author img

By

Published : Dec 13, 2022, 7:57 PM IST

பால் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலி

ஈரோடு: சோலாரில் இருந்து வெண்டிப்பாளையம் செல்லும் வழியில் தனியார் பால் குளிர்பதனிடும் நிறுவனம் உள்ளது. பாலு என்பவருக்குச் சொந்தமாக நிறுவனத்தில் பால் குளிரூட்டப்பட்டு பால்கோவா, பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்காக சமீபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பாய்லர் கருவிகளை பாலு ஆலையில் நிறுவி உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் பணியில் இருந்த தொழிலாளர்களில், ஒருவர் பாய்லரை இயக்கி உள்ளார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பாய்லரை இயக்கிய கருமாண்டாம்பாளையத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் ஆலையின் மேற்கூரை மற்றும் அருகில் இருந்த பொருட்களும் தூக்கிவீசப்பட்டு சேதமடைந்தன. மற்ற தொழிலாளிகள் விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தது வந்த மொடக்குறிச்சி போலீசார், உயிரிழந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து பாய்லர் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நண்பர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறை தயாராவதை ஆய்வுசெய்த அமைச்சர் அன்பில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.