மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி ஈரோடு அருகேயுள்ள பவளத்தாம்பாளையத்தில் நடைபெற்றது. இப்போட்டியை ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தொடங்கிவைத்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 5 வயது முதல் 18 வயது வரையிலானோருக்கு தனித்தனி பிரிவுகளில், இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியின் அனைத்துப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டதாக, ஈரோடு மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.