ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இன்று (டிச.4) காலை 7.27 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த அதிர்வு ஹைதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டத்திலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, முலுகு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறுகின்றனர். அதிகாலையிலேயே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
EQ of M: 5.3, On: 04/12/2024 07:27:02 IST, Lat: 18.44 N, Long: 80.24 E, Depth: 40 Km, Location: Mulugu, Telangana.
— National Center for Seismology (@NCS_Earthquake) December 4, 2024
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/x6FAg300H5
தற்போதைய நிலவரப்படி, எந்த வித சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தேசிய நில அதிர்வு மைய அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, நவ.28 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நவ.30 ஆம் தேதி அஸ்ஸாமின் கர்பி அங்லாங் பகுதியில் அதிகாலை 2.40 மணியளவில் சுமார் 2.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இந்த நில நடுக்கத்தில் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.