ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ளது, அரியப்பம்பாளையம் கிராமம். இங்கு மக்கள் பயன்பெறும் வகையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் உதவியாளர் உள்ளிட்டப் பணியாளர்கள் அரசின் நலத்திட்ட உதவிகள், பட்டா வழங்கும் பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் அதிகம் வந்து செல்லும் இந்த அலுவலகக் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தும், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு வலுவிழந்தும் காணப்படுகிறது.
அலுவலகத்தின் மேற்கூரை ஈரப்பதமாக உள்ளதால், எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முதியோர், சிறுவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் வந்து செல்லும் இந்த அலுவலகத்தின் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தரப்படவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 5 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு