கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரோடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணா நகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி இயந்திரங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கிருமி நாசினி தெளித்தார். மேலும் 50 ஆயிரம் மதிப்பிலான 10 க்கும் மேற்பட்ட கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் அவர் வழங்கினர்.
இதையும் படிக்க:கரோனா பீதி - கபசுர குடிநீர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்