ETV Bharat / state

சாலையில் சுற்றித்திரியும் யானையால் வாகன ஓட்டிகள் பீதி! - sathyamakalam elephant

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் ஒற்றை ஆண்யானை நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சாலையில் சுற்றித்திரியும் யானை
author img

By

Published : Aug 30, 2019, 10:49 AM IST

Updated : Aug 30, 2019, 12:27 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரங்களிலேயே சாலைகளில் நடமாடுவது வாடிக்கையாகியுள்ளது.

சாலையில் சுற்றித்திரியும் யானை

இந்நிலையில், இன்று காலை சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் உள்ளிட்டோர் யானையை புகைப்படம் எடுப்பதற்காக சாலையில் இறங்கி நிற்கின்றனர்.

இதனை அறிந்த ஆசனூர் வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனங்களை மிக கவனமாக இயக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதபடி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Intro:Body:tn_erd_01_sathy_male_elephant_vis_tn10009

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை ஆண்யானை:

வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் ஒற்றை ஆண்யானை நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில் தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரங்களிலேயே கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை ஆண் யானை சுற்றி திரிந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இரு சக்கர வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்துக்குள்ளானார்கள். சாலையோரம் சுற்றி திரிந்த யானை குறித்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆசனூர் வனத்துறையினர் ஒற்றை யானை சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் வாகனத்தை இயக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன போக்குவரத்து இடையூறு ஏற்படாதபடி கண்காணிப்புபணியில் ஈடுபட்டனர்.

Conclusion:
Last Updated : Aug 30, 2019, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.