ETV Bharat / state

யானைகள் சாலையை கடக்கிறதா... வாகன ஓட்டிகளே மொத இத கவனியுங்க!

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனுார் வனத்தில் தண்ணீர் தேடி சாலையை கடக்கும் யானைகள், அவ்வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதால், மெதுவாகச் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

author img

By

Published : Apr 29, 2019, 10:16 AM IST

SATHIYAMANGALAM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனுார், தலமலை, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன.

கோடைகாலத்தை முன்னிட்டு, ஆசனுார், தாளவாடி பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு காணப்படுவதால், தண்ணீருக்காக யானைகள் ஆசனுார் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம்கூட்டமாக சாலையைக் கடக்கின்றன.

ஆசனுார்
தண்ணீர் தேடி சாலையை கடக்கும் யானைகள்

தமிழ்நாடு-கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் ஆசனுார் சாலை வழியாகச் செல்லும்போது, வாகனங்களை யானைகள் துரத்துகின்றன. மேலும், யானைகள் சாலையை கடக்கும்போது வாகனத்தை நிறுத்தி போட்டோ எடுப்பது, வேடிக்கை பார்ப்பது சட்டப்படி குற்றமென வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

யானைகள் சாலையோரம் நிற்பதால், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் எனவும், பகல் நேரங்களில் மட்டுமே இரு சக்கர வாகன ஓட்டிகள் பயணிக்குமாறும் - அதுவும் மெதுவாகத்தான் கடக்க வேண்டும் எனவும் வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆசனூர் பகுதியில் தண்ணீர் தேடி சாலையை கடக்கும் யானைகள்  
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_SATHY_01_29_ELEPHANT_PHOTO_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனத்தில் தண்ணீர் தேடி சாலையை கடக்கும் யானைகள் இரு சக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லமாறு வனத்துறைஅறிவுறுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்  ஆசனூர், தலமலை, தாளவாடி ,ஜீர்கள்ளி ,கேர்மாளம் ,கடம்பூர் ,டி.என்.பாளையம் ,விளாமூண்டி ,பவானிசாகர், சத்தியமங்கலம்,  என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இந்த  வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது ஆசனூர், தாளவாடி பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. தலமலை, ஆசனூர் வனப்பகுதி யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளது. தற்போது வனப்பகுதியில் தண்ணீர் வறண்டு ஓடைகள் மணல்  திட்டகளாக காட்சியளிக்கின்றன. இதனால் யானைகள் தண்ணீர் தேடி ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கின்றன. தமிழகம் கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் ஆசனூர் சாலை வழியாக செல்லும் போது அவ்வழியாக செல்லும் வாகனங்களை துரத்துகிறது . மேலும் யானைகள் சாலையை கடக்கும்போது வாகனத்தை நிறுத்தி போட்டோ எடுப்பது வேடிக்கை பார்ப்பது சட்டப்படி குற்றமாகும் என வனத்துறை எச்சரித்துள்ளது. யானைகள் சாலையோரம் நிற்பதால்இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என்றும் பகல் நேரங்களில் மட்டுமே இரு சக்கர வாகன ஓட்டிகள் பயணிக்குமாறு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.