ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் அவ்வப்போது சுற்றித்திரிவது வழக்கம்.
குறிப்பாக மக்னா யானை கடந்த சில நாள்களாக சாலையில் சுற்றித்திரிந்தபடி அட்டகாசம் செய்துவருகிறது. இந்நிலைியல், பண்ணாரி காவல் துறை சோதனைச்சாவடி முன்பு வந்த ஒற்றை யானை சாலையின் நடுவே நின்றபடி வாகனங்களை வழிமறித்தது.
இதைக்கண்ட சோதனைச்சாவடி காவல் துறையினர், வன சோதனைச்சாவடி ஊழியர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரமாக அந்த யானை சாலையின் நடுவே நின்றபடி வாகனங்களை வழிமறித்தது.
இதைடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டியதால் போக்குவரத்து சீரானது.
இதையும் படிங்க: உலகத்தரமான சாலைகள் அமைத்து விபத்துகளைக் குறைத்த அதிமுக அரசு...!'