சத்தியமங்கலம் கூத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். பந்தல் அமைக்கும் கூலித்தொழிலாளியான இவர் தோப்பூர் காலனியில் நடைபெறவுள்ள கோயில் திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள நடராஜ் என்பவரின் வீட்டு மேல்மாடியில் பந்தல் அமைத்துக்கொண்டிருக்கும்போது, கையில் வைத்திருந்த இரும்புக்கம்பி பொருத்தப்பட்ட சவுக்கு குச்சி வீட்டு மாடியை ஒட்டி செல்லும் மின்கம்பியில் உரசியது.
இதையடுத்து சரவணன் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் அங்க விரைந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.