ETV Bharat / state

தேர்தல் புறக்கணிப்பு -  ஃபிளக்ஸ் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்! - கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு

ஈரோடு : அய்யம்பாளையம் கிராமத்தில் வாக்காளர்கள் அனைவரையும் ஒன்றாவது வார்டில் சேர்க்க வேண்டும் எனக்கூறி ஃபிளக்ஸ் வைத்து போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

athy_election_boycott
athy_election_boycott
author img

By

Published : Dec 13, 2019, 11:57 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் ஒன்றாவது வார்டில் இருந்த 362 வாக்காளர்களில், 192 வாக்காளர்களை நான்காவது வார்டுக்கு, வார்டு வரைமுறையின் அடிப்படையில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்துள்ளனர். அதனால், ஒன்றாவது வார்டில் உள்ள வாக்காளர்கள் அருகில் உள்ள வாக்குப்பதிவு மையத்தை விட்டு, நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டியுள்ளது.

அந்த வாக்குச்சாவடிக்கு சென்று வர போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை எனவும், வயதானவர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர், கிராம மக்கள். மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள நான்குபேரில் இரண்டு பேருக்கு ஒன்றாவது வார்டில் வாக்களிக்கும் உரிமையும், இரண்டு பேருக்கு நான்காவது வார்டில் வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்கள்

இதனால் வார்டு வரை முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரே வீதிக்கு இரண்டு உள்ளாட்சி உறுப்பினர்கள் இருந்தால் அடிப்படை வசதிகளை யாரிடம் கேட்டுப்பெறுவது என்று மக்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே, அய்யம்பாளையம் கலைவாணர் வீதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரையும் ஒன்றாவது வார்டில் சேர்க்கவேண்டும் எனக்கூறியும், அதுவரை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் வாக்கு சேகரிக்க உள்ளே வரக்கூடாது என்றும் அறிவிப்பு செய்து ஃபிளக்ஸ் வைத்து இக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

இளம்பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

Intro:Body:tn_erd_04_sathy_election_boycott_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில் ஒன்னாவது வார்டில் இருந்த வாக்காளர்களை வார்டு வரைமுறையில் ஏற்பட்ட குளறுபடிகளினால் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நான்காவது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிரிக்கப்பட்டுளவர்களை ஒன்னாவது வார்டில் சேர்க்கவேண்டும் எனக்கோரியும் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து பிளக்ஸ் வைத்தும் வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினர் உள்ளே வரக்கூடாது என்று அறிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில் ஒன்னாவது வார்டில் இருந்த 362 வாக்காளர்களில் 192 வாக்காளர்களை நான்காவது வார்டுக்கு வார்டு வரைமுறையின் அடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் ஒன்னாவது வார்டில் உள்ள வாக்காளர்கள் அருகில் உள்ள வாக்குப்பதிவு மையத்தை விட்டு நான்கு கிலோமீட்டர் தொலையில் உள்ள தென்காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் அந்த வாக்குச்சாவடிக்கு சென்று வர போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை எனவும் வயதானவர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்துகினறனர். மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள நான்குபேரில் இரண்டு பேருக்கு ஒன்னாவது வார்டில் வாக்களிக்கும் உரிமையும் இரண்டு பேருக்கு நான்காவது வார்டில் வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வார்டு வரைமுறையில் பலவேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரே வீதிக்கு இரண்டு உள்ளாட்சி உறுப்பினர்கள் இருந்தால் அடிப்படை வசதிகளை யாரிடம் கேட்டுப்பெறுவது என்றும் வேதனை தெரிவித்தனர். அதனால் அய்யம்பாளையம் கலைவாணர் வீதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரையும் ஒன்னாவது வார்டில் சேர்க்கவேண்டும் எனக்கூறியும் அதுவரை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் அரசியல் கட்சியினர் யாரும் வாக்கு சேகரிக்க உள்ளே வரக்கூடாது என்றும் அறிவிப்பு செய்து பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.