ETV Bharat / state

மலைச்சரிவில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு! - ஈரோடு மலைச்சரிவில் விழுந்த முதியவர்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரி மலைச்சரிவில், தவறி விழுந்த முதியவர் 12 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.

ஈரோடு சதியமங்கலம் மலைச்சரிவு
மலைச்சரிவில் தவறிவிழுந்த முதியவர் உயிருடன் மீட்பு
author img

By

Published : Mar 17, 2021, 11:33 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப் பகுதியில், விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால், விளைநிலங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதற்காக சமவெளிப் பகுதியிலிருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர், கடம்பூர் மலைப் பகுதியில் விளைநிலங்களை வாங்குவதற்காக பார்த்து செல்கின்றனர்.

ஈரோடு செய்திகள்
மலைச்சரிவில் விழுந்த முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார்

இந்நிலையில் துடுப்பதியிலிருந்து ரங்கராஜ், ஈரோட்டைச் சேர்ந்த தனபால், நாகராஜ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் கடம்பூர் சென்றனர். அங்கு விளைநிலங்களை பார்வையிட்டு மீண்டும் மலைப் பாதையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரங்கராஜ்(66) தனி இரு சக்கர வாகனத்திலும், தனபால், நாகராஜ் ஆகியோர் மற்றொரு வாகனத்திலும் வந்தனர்.

இதற்கிடையே முன்னால் சென்ற தனபால், நாகராஜ் ஆகியோர் கே.என். பாளையம் சோதனைச் சாவடியிடம் சென்ற நிலையில், பின்னால் வந்த முதியவர் ரங்கராஜூவை காணவில்லை. இதனால் வழிநெடுகிலும் அவர்கள் தேடிப்பார்த்த நிலையில், ரங்கராஜ் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மலைச்சரிவில் தவறிவிழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

இதைத் தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் ரங்கராஜை தேடியபோது, மல்லியம்துர்க்கம் என்ற இடத்தில் 50 அடி பள்ளத்தில் வாகனத்துடன் மயக்க நிலையில் அவர் கிடப்பது தெரியவந்தது. மலைச் சரிவில் இறங்கிய வனத்துறையினர் முதியவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். 12 மணி நேரம் தண்ணீர் இல்லாமல் கிடந்ததால் அவர் மயக்கமுற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பழிக்குபழி நடந்த கொலை சம்பவம் - குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.