ஈரோடு அடுத்துள்ள தொட்டிபாளையம் பகுதியில் கரட்டுப்பள்ளம் பகுதியில் 40 ஆண்டுகள் பழமையான ஏரி உள்ளது. கீழ்பவானி பிரதான கால்வாயில் இருந்து வரும் கசிவு நீரை ஆதாரமாக கொண்டு இருக்கும் இந்த ஏரி, நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக ஏரியின் ஓரு பகுதி முற்றிலுமாக உடைந்தது.
இதன் காரணமாக ஏரியின் நீர் முற்றிலுமாக வெளியேறி கரட்டுபள்ளம், கள்ளியங்காட்டு வலசு, கெங்கம்பாலி, நல்லியம்பாளையம், காசிபாளையம் பகுதியின் வழியாக உள்ள நீர் வழி தடங்கள் வழியாக சென்றது.
ஏரியின் நீர் சாலையில் பெருக்கெடுத்து சென்றதால் தேங்கிய நீரில் வாகனங்கள் நீந்தியபடி சென்றது.
இதையும் படிங்க: புஞ்சைபுளியம்பட்டி மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கும் மேல் கால்நடை விற்பனை