ETV Bharat / state

நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட வழக்கு - ஈரோடு ஆட்சியர் அலுவலகப் பொருள்கள் ஜப்தி - ஆட்சியர் அலுவலக பொருள்கள் ஜப்தி

வீட்டு வசதி வாரிய வீடுகள் அமைக்க நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய இழப்பீடு வழங்காததால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொருள்கள் ஜப்தி செய்யப்பட்டன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 4, 2022, 10:44 PM IST

ஈரோடு கொல்லம்பாளையத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைப்பதற்காக 5.45 ஏக்கர் நிலம் 1986ஆம் ஆண்டு ஆர்ஜிதம் செய்யப்பட்டது. எட்டு பேருக்கு உரிய தொகை வழங்கப்படாததால் அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். இவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3 லட்சத்து 500 ரூபாய் கணக்கிட்டு இழப்பீடு வழங்க 1999ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களிலும் மேல்முறையீட்டு வழக்குகள் நடைபெற்றன. அதிலும் இழப்பீட்டுத்தொகை உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத்தொகை 78 லட்சத்து 23 ஆயிரத்து 635 ரூபாய் வழங்கப்படாததால் ஈரோடு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50 கணினிகள், 50 டைப் ரைட்டிங் மெஷின்கள், 50 பீரோக்கள், 100 மின் விசிறிகள், 500 நாற்காலிகள் 400 மேஜை உள்ளிட்ட பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு நகலுடன் நீதிமன்ற ஊழியர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட வழக்கு - ஈரோடு ஆட்சியர் அலுவலகப் பொருள்கள் ஜப்தி

இதையும் படிங்க: ஐபிஎல் சூதாட்ட வழக்கு: ஐபிஎஸ் அலுவலர் மீது அவதூறு வழக்குதொடுத்த தோனி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.