பவானிசாகர் அணையின் முன்புறத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பூங்காவில் படகு சவாரி, சிறுவர்களுக்கென ரயில், கொலம்பஸ், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாநில எல்லையோர மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களை தற்காலிகமாக மூட அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து பவானிசாகர் அணைப்பூங்காவில் இருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு பூங்கா மூடப்பட்டது. மேலும் மார்ச் 31ஆம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக நுழைவு வாயிலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.