ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக அந்தியூர் எம்.எல்.ஏ வெங்கடாசலம் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்றுகொண்டிருந்த தனியார் முட்டை நிறுவனத்தை சேர்ந்த வாகனம் விபத்துக்குள்ளானது.
இதையடுத்து பின்னால் வந்த எம்எல்ஏ வெங்கடாசலம் தனது காரை உடனடியாக நிறுத்தி காயமடைந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆல்பர்ட் என்பவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் போக்குவரத்தை சரிசெய்த பின்னர் அங்கிருந்து அவர் கிளம்பினார். எம்.எல்.ஏவின் இந்த செயலுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.