ஈரோடு மாவட்டம் அந்தியூரில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று (மார்ச்.16) நடந்தது. இக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் முன்னிலை வகித்தார். இதில் அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் வெங்கடாசலத்தை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் என்.கே.கே பெரியசாமி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
தொடர்ந்து அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் மாற்று கட்சியினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நல்லசிவம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'எம்ஜிஆர் தொடங்கிய மூன்றாவது அணிதான் மற்றக் கட்சிகளை வனவாசம் அனுப்பியது' - கமல்ஹாசன்!