ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "அதிமுகவுடனான தேமுதிகவின் கூட்டணி தொடரும். ராஜ்யசபா எம்பி வழங்குவது குறித்து அதிமுக உறுதியளிக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும் அவருடன் கூட்டணி குறிப்புகளை பின்னர் பார்க்கலாம். குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கருதி கொண்டுவரப்பட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் இதனை தவறாக பரப்புரை செய்து இன ரீதியாக மன ரீதியாக போராட்டத்தைத் தூண்டிவிடுகின்றனர். குடியுரிமை சட்டத்தால் ஒருவர் பாதித்தால்கூட தேமுதிகதான் முதலில் குரல் கொடுக்கும்” என்றார்.
இதையும் படிங்க: சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு: இஸ்லாமிய அமைப்பினர் திடீர் சாலை மறியல்