ETV Bharat / state

பழங்குடியின மக்களுக்கு நில உரிமைப் பட்டா - நேரில் சென்று வழங்கிய ஈரோடு கலெக்டர் - சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

தாளவாடி மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வீடுகளுக்கே சென்று மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜூலை.24) நில உரிமைக்கான பட்டாக்களை வழங்கினார்.

housing strap
housing strap
author img

By

Published : Jul 25, 2021, 12:35 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி கோட்டத்தில் வாழும் பழங்குடியினருக்கு நீண்ட நாள்களாக சாதிச்சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. மேலும் மலைக்கிராமங்களில் இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல், நில உரிமையின்றி இருப்பதாகவும் கோரிக்கை மனுக்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தாளவாடி வனப்பகுதியில் உள்ள அரேப்பாளையம், தேவர்நத்தம் இட்டரை, எலக்கடை, திகினாரை, மல்லன்குழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று நில உரிமைக்கான பட்டாக்களை வழங்கினார்.

மேலும், 327 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, பள்ளி மாணவர்களுக்கு இந்து மலையாளிக்கான சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.

பிறகு மாவட்ட ஆட்சியர் அரேப்பாளையத்தில் வேளாண் உற்பத்தியாளர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து வேளாண் உற்பத்தியாளர் தயாரிக்கும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைப் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: பேரறிவாளன் வீட்டு பந்தல் வாடகையை எப்ப தருவீங்க?’ - பதறவைத்த பந்தல் அமைப்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.