கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில எல்லையோரப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, ஈரோட்டில் சத்தியமங்கலம் அருகே தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் மருத்துவக் குழுவினர் தங்களது பணியை தொடங்கியுள்ளனர். அவ்வழியாக தமிழ்நாடு நோக்கி வரும் வாகனங்கள் அனைத்துக்கும் கிருமிநாசினி மருந்து தெளித்து வருகின்றனர். இது மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதோடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வருகிறார்களா என்பதும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பொதுமக்களே உஷார்..போலி கால் சென்டர் சலுகைய நம்பி ஏமாறாதீங்கோ!