ETV Bharat / state

நாய்கள் துரத்தியதால் வீட்டிற்குள் புகுந்த புள்ளிமான்! - Deer that entered

சத்தியமங்கலம் அருகே நாய்கள் துரத்தியதால் வீட்டிற்குள் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர்.

நாய்கள் துரத்தியதால் வீட்டிற்குள் புகுந்த புள்ளிமான்!

author img

By

Published : May 12, 2022, 9:49 AM IST

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வசிக்கின்றன. இந்த புள்ளிமான்கள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களில் நுழைவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இந்நிலையில் நேற்று (மே11) தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புள்ளிமான் அங்கு இருக்கும் திப்பு சர்க்கிள் பகுதியிலுள்ள ஆரிப் பெய்க் என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்தது.

அந்த நேரத்தில் அப்புள்ளிமானைக் கண்ட அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் மானை துரத்தின. இவ்வாறு நாய்கள் துரத்தியதால் தலை தெறித்து ஓடிய புள்ளிமான் அப்பகுதியில் உள்ள ஷெரீப் என்பவரது வீட்டிற்குள் புகுந்தது. புள்ளிமான் வீட்டிற்குள் புகுந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு இடத்திற்குச் சென்ற தாளவாடி வனத்துறையினர், புள்ளி மானை பிடித்து வேனில் ஏற்றி வனப்பகுதியில் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: பேச்சு வரலை.. யாரையும் அடையாளம் தெரியலை.. என்ன ஆச்சு நித்தியானந்தாவுக்கு..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.