ETV Bharat / state

’1 கோடி விதைப் பந்துகள் செய்வதுதான் இலக்கு’- வியக்க வைக்கும் சிறுவன் மேகன்! - ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்த மாணவன்

விடுமுறையின் தொடக்கக் காலத்தில் நண்பர்களோடு விளையாடச் செல்வது ஆர்வமாக இருந்தது. ஆனால் நாள் ஆக ஆக சலித்துவிட்டது என அலுத்துக் கொள்ளும் மேகன் விதைப்பந்துகள் தயாரிப்பதுதான் பிடித்திருப்பதாக புன்முறுவல் செய்கிறார்.

megan
megan
author img

By

Published : Jul 3, 2020, 7:56 AM IST

Updated : Jul 7, 2020, 3:37 PM IST

நவீனக் காலத்திற்கு முன்பு சிட்டுக்குருவிகள், யானை போன்ற உயிரினங்கள்தான் விதைப்பந்துகளாகச் செயல்பட்டன. பழங்களை உண்டு பின்னர் அவைகளிட்ட எச்சம்தான் காடுகளைச் செழித்தோங்கச் செய்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் வன உயிரினங்கள் இருப்பே கேள்விக்குறியாகும் நிலையில், அவை வனங்களை எப்படி உருவாக்கும். அதற்காக மனிதர்கள் தயாரிப்பதுதான் விதைப்பந்துகள். விதைப்பந்துகள் பராமரிப்பு இல்லாமலே நன்றாக வளரும்.

எப்படி?

விதைப்பந்துகளை மண், எரு போன்றவை கலந்துசெய்வதால் எலி, எறும்பு, பறவைகள் உள்ளிடவற்றால் பாதிப்பு ஏற்படாது. விதைகள் முளைப்பதற்குத் தேவையான சத்தானது, அதில் ஏற்கனவே கலக்கப்பட்ட எருவிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். இதனால் விதைகள் முளைப்பது எளிதாகும். தரிசு நிலங்களில் வீசிய விதைப்பந்து, ஒரு வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும்.

ஒரு வீசும் விதைப்பந்தானது, மழை பெய்து முளைப்பதற்கு ஏற்ற சூழ்நிலையில், தட்டையாக உருகி உள்ளிருக்கும் விதைகள் முளைப்பதற்கு துணை புரியும். உருண்டையில் உள்ள மண், வேர்கள் வலுவாக மண்ணில் நிலைக்க உதவும். காடுகளை உருவாக்குவதற்கு விதைப்பந்து முறை சரியான தீர்வாக அமையும். இதுதான் தீர்வு என்று அறிந்த பின்னர், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகளைத் தயாரித்து, வனத்தை உருவாக்க முனைந்துள்ளான் சிறுவன் ஒருவன். பச்சைத் தலைகளை அசைக்கும் மரங்களின் உடலை ஆதரவாகத் தொடுவதும், அவற்றோடு பேசுவதும் மேகனுக்கு அலாதி பிரியம்.

ஈரோடு மாவட்டம் அருகேயுள்ள முள்ளாம்பரப்பு பகுதியிலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாலமுருகன், சண்முகப் பிரியா தம்பதியின் அன்பு மகன்தான், சிறுவன் மேகன். நான்காம் வகுப்பு மாணவனான மேகன் ஊரடங்கு கால விடுமுறையால் சலித்துவிடக் கூடாது என்பதற்காக பாலமுருகன் கொடுத்த டாஸ்க்தான் விதைப்பந்துகள் தயாரிப்பு.

கடந்த சில வருடங்களாகவே பாலமுருகன் விதைப்பந்துகள் தயாரிப்பதையும், அதை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசளிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து பழகிய மேகனுக்கு விதைப்பந்துகள் தயாரிப்பது எளிமைதான் எனத் தோன்றினாலும், உள்ளூரத் தயக்கம் இருந்தது.

இதைப் புரிந்து கொண்ட மேகனின் பெற்றோர், ‘நாங்களும் உன்கூட விதைப்பந்து செய்யுறோம்’ என நம்பிக்கையூட்டினர். விடுமுறையில் விளையாடிக் களைத்த மேகன் விதைப்பந்து தயாரிப்பில் லயித்திருப்பது, அவருடைய பெற்றோருக்கு மகிழ்ச்சியளித்தது.

கடந்த இரண்டு மாதங்களில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை செய்துவிட்டார் என பெருமிதம் பொங்கப் பேசத் தொடங்குகிறார் தந்தை பாலமுருகன், “கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தும் வேலி மசால் என்ற மரத்தின் விதைகளைத்தான் தற்போது மேகன் விதைப்பந்துகளாகச் செய்து கொண்டிருக்கிறார்.

வியக்க வைக்கும் மேகன்

இந்த விதைகள் வளரும் பட்சத்தில் சுற்றுச்சூழல் மேம்படுவதோடு கால்நடைகளை மேய்ப்பவர்களும் பயன்பெறுவர். அவனுக்கு மரம் வளர்ப்பதில் இருந்த ஆர்வத்தைத் தூண்ட விதைப்பந்துகளைத் தயாரிக்கக் கற்றுக் கொடுத்தேன். சிறு வயதில் இது போன்ற நற்பண்புகளைக் கற்றுக் கொள்வது அவசியமானது. அவர்களின் மனது பசுமரத்தாணி போல..அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது காலத்தின் தேவை” என்றார்.

விடுமுறையின் தொடக்கக் காலத்தில் நண்பர்களோடு விளையாடச் செல்வது ஆர்வமாக இருந்தது. ஆனால் நாள் ஆக ஆக சலித்துவிட்டது என அலுத்துக் கொள்ளும் மேகன் விதைப்பந்துகள் தயாரிப்பதுதான் பிடித்திருக்கிறது என நறுக்கென பதிலளிக்கிறார்.

“ஆரம்பத்தில் விதைப்பந்துகள் தயாரிப்பது சிரமமாக இருந்தது. பிறகு விதைப்பந்துகளின் நன்மைகளை அப்பா கூறுவதைக் கேட்டதும் ஆர்வம் அதிகரித்தது. விதைப்பந்துகளால் நிறைய மரங்கள் உருவாகும், இதனால் தூய்மையானக் காற்று சுவாசிக்கக் கிடைக்கும். விதைப்பந்துகளை பள்ளம் தோண்டி புதைத்திடத் தேவையில்லை.

விருப்பப்படும் இடத்தில் வீசியெறிந்தால் அதுவே நாளடைவில் மரமாகும். என் நண்பர்களுக்கும் விதைப்பந்துகளை தயாரிக்கக் கற்றுக் கொடுக்கவுள்ளேன். எனது பெற்றோருடன் இணைந்து ஒரு கோடி விதைப்பந்துகளை தயாரிப்பதே எனது அடுத்தக்கட்ட இலக்கு” என முறுவலிக்கிறார் மேகன்.

இதையும் படிங்க: கரோனா ஹீரோக்களுக்கு பாராட்டு ஓவியம்: 400 பேர் வரைந்து சாதனை

Last Updated : Jul 7, 2020, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.