சத்தியமங்கலம் அருகே அண்ணாநகர் பகுதியில் அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் ஏற்றிச் செல்லப்படுவதாக கனிம வளத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் பவானிசாகர் - புஞ்சைபுளியம்பட்டி சாலையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் கனிமவளத்துறையைச் சேர்ந்த பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து சோதனையிட்டனர். அதில், எவ்வித ஆவணங்களும் இன்றி கிராவல் மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், ஓட்டுநரை கைது செய்து புஞ்சைபுளியம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு பறிமுதல் செய்யப்பட்ட லாரி சத்தியமங்கலம் வட்டாசியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.