ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள, நம்பியூர் பட்டிமணியகாரன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதேபோன்று கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து இரு வேறு பள்ளிகளில் பயிலும் மொத்தமுள்ள 463 மாணவர்கள், 56 ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து இரு பள்ளி வளாகங்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 1,661 பேருக்குக் கரோனா