கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக பிரதம மந்திரியின் ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தில் கணக்கு தொடங்கிய பெண்களுக்கு நிவாரண தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்நிலையில், ஜன்தன் வங்கி கணக்கு தொடங்கிய பெண்களின் பட்டியல் வங்கிகள் முலம் பெறப்பட்டு தற்போது அவர்களது வங்கி கணக்கிற்கு 500 ரூபாய் பணம் அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் பிரதம மந்திரியின் ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தில் கணக்கு தொடங்கியுள்ளனர்.
இன்று பவானிசாகர் பாரத ஸ்டேட் வங்கி கிளை பணியாளர்கள் நேரடியாக இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று பெண்களுக்கு நிவாரணத் தொகையான 500 ரூபாயை வழங்கினர். முன்னதாக பணம் பெற வந்த பெண்களுக்கு கை கழுவ சானிடைசர் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவியை பயன்படுத்தி கணிணியில் பதியப்பட்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பணம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் போன்று நாட்டில் தோன்றிய புது வைரஸ்!