ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச்சந்தை வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும்.
இந்தச் சந்தையில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிலிருந்தும் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவருவதுடன் மேலும் இங்கிருந்து வாங்கிச் செல்வதும் எனக் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் கரானோ அச்சுறுத்தல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதாவது மார்ச் 31ஆம் தேதி வரை கால்நடைச் சந்தைக்கு தடைவிதிப்பதாக புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
இதனால் இந்த விடுமுறை அறிவிப்பை பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாட்டுச்சந்தை உள்பட எந்தக் கால்நடைகளும் கொண்டுவரப்படாததால் மாட்டுச்சந்தை வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் இச்சந்தை வியாபாரிகளுக்குப் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குமரியில் தங்கும் விடுதிகள் மூடல்!