ஈரோட்டில் தாய்லாந்திலிருந்து வந்தவர்களுக்கு கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து, தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த கொல்லம்பாளையம் பகுதி, அவர்கள் தொழுகை நடத்திய சுல்தான்பேட்டை மஜித் பகுதியில் உள்ள கொங்காலம்மன் கோவில் 5 விதிகள், கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த மரப்பாலம், மோசிக்கினார் வீதி, கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அந்த பகுதிகளில், சுகாதாரத்துறை, மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கபட்டுவருகிறது.
இந்நிலையில், கரோனா உறுதி செய்யபட்டவர் வசித்த கள்ளுக்கடை மேடு பகுதியிலிருந்து வெளியே சென்று, ஒருவர் ஆவின் பால் விற்பனை செய்துவந்தார். தகவலறிந்து வந்த வருவாய் துறை, காவல்துறையினர் அந்நபரைக், கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலமாக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட ரிக் வண்டி தொழிலாளி திடீர் உயிரிழப்பு!