ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது கொடிவேரி நீர்த்தேக்கம். இங்கு ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் நாளன்று கிராம மக்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வது வழக்கம்.
தற்போது கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி நீர்த்தேக்கப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி களையிழந்து காணப்பட்டது.
மேலும், பயணிகளின் வருகையில்லாததால், அங்குள்ள மீன் விற்பனை நிலையம், உணவகம் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன. ஆடி பதினெட்டாம் நாள் ஆற்றில் குளிப்பது ஐதீகம் என்றாலும், தற்போது நிலவும் சூழலை கருத்தில்கொண்டு பொதுமக்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:ஆடிப்பெருக்கின் சிறப்பு என்ன? - வரலாற்றுத் துறை பேராசிரியரின் சிறப்பு நேர்காணல்