சமய மாநாட்டில் கலந்துகொண்டு சத்தியமங்கலம் திரும்பிய மூன்று பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையினர் அழைத்துச் சென்று பெருந்துறை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் குடியிருந்த வீட்டை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் உள்ள ஆயிரத்து 892 வீடுகளில் உள்ள ஆறாயிரத்து 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியின் 16 வீதிகளிலுள்ள 26 நுழைவு வாயில்களும் தடுப்புக்கம்பிகளால் மூடப்பட்டன. சமூகப் பரவலதை தடுக்க, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு செல்லமுடியாதபடி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் குடியிருப்போருக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன், கோட்டாட்சியர் ஜெயராமன், நகராட்சி ஆணையாளர் அமுதா ஆகியோர் கேட்டறிந்தனர்.
காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு தருமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பலத்த மழையால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை