ETV Bharat / state

முகக்கவசம் அணியாமல் பயணம்: வாகனங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு - ஈரோட்டில் ஊரடங்கு உத்தரவு

ஈரோடு: முகக்கவசம் அணியாமல் சாலையில் சென்ற 20-க்கும் மேற்பட்டவர்களின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பறிமுதல்செய்ய உத்தரவிட்டார்.

erode collector seized vehicles
erode collector seized vehicles
author img

By

Published : Jun 27, 2020, 10:48 AM IST

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் அதிகரித்துவருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. அதில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதையடுத்து பலர் முகக்கவசம் அணியாமல் சாலைகளில் சென்றுவருவதாக மாவட்ட ஆட்சியர் சி. கதிரவனுக்குத் தகவல் வந்துள்ளது.

அதனால் அவர் இன்று காலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாலையில் காவல் துறையினருடன், திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் அனைவருக்கும் அபராதம் விதித்தார். அதுமட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நாளை முதல் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு :அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.