ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள வானிசாகர் வனப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகள் கோடைக் காலங்களில் உணவு மற்றும் குடிநீருக்காக வந்து செல்வது வழக்கம். தற்போது அப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன.
காலை மற்றும் மாலை நேரங்களில் நீர் தேக்கப் பகுதிகளில் வளர்ந்துள்ள புற்களை உண்பதற்கும், குடிநீர் அருந்துவதற்கும் 25க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணை நீர் தேக்கப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வன கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.