சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் வியூகங்கள் அமைத்து தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ஆகியோரும் தங்களது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாறு படைக்கும் நோக்கில், 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற முழக்கத்தோடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சூறாவளி தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி பவானிக்கு வருகை தந்தார். அப்போது, முதலமைச்சர் பழனிசாமியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் வட்டாட்சியர் கதிரவன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையை காண்பதற்காக அதிகளவிலான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் வருகை தந்தனர். வெகுநேரமாக காத்திருந்த தொண்டர்களை உற்காசப்படுத்தும் மேடை அமைக்கப்பட்டு எம்ஜிஆர் பாடல்களுக்கு நடன கலைஞர்களை கொண்டு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் பாடல்களுக்கு நடனமாடி அதிமுக தொண்டர்களை நடன குழுவினர் உற்சாகப்படுத்தினர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் மக்கள் கிராம சபையால் மக்களுக்கு பயன் இல்லை: முதலமைச்சர் பழனிசாமி