ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்றார். அதில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, 15 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர், "எல்கேஜி, யுகேஜி பள்ளிகள் விடுமுறையில் எவ்வித குழப்பமும் தேவையில்லை. அது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை அறிவிப்பார்.
நீட் தேர்வுக்கு ஏழாயிரத்து 500 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு முடிந்தவுடன் ஒன்பது கல்லூரிகளில் 35 நாள்களுக்கு முழுப் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ், கோட்டாட்சியர் ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நிறுத்தப்படவில்லை' - முதலமைச்சர் விளக்கம்