ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள கேர்மாளம் அருகே சிக்குன்சேபாளையம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஜடேருத்ரசாமி கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு வழக்கம்போல் நடுக்கரை மாதேஸ்வரன், ஜடேருத்ரசாமி, கும்பேஸ்வர சுவாமிக்கு எண்ணெய் மஞ்சன சேவையும் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இத்திருவிழாவில் கேர்மாளம், கெத்தேசால், கோட்டாடை, மாவள்ளம், கடம்பூர், ஆசனூர், கர்நாடக மாநிலத்தில் உள்ள கொள்ளேகால், ஹனூர், உடையார்பாளையம், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தேர் உலா வருவதை கண்டுகளித்தனர்.
பின்னர், சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஜடேருத்ரசாமியை வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : தேர்த்திருவிழாவுக்கு இடையூறாக உள்ள சிக்னல்களை அகற்றக்கோரி போராட்டம்!