ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாமல் இந்த சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும், அதாவது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று கூடிய சந்தைக்கு 40 எருமைகள், 250 கலப்பின மாடுகள், 80 கன்றுகள், 300 ஜெர்சி ரக மாடுகளை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதேபோல எருமைகள் ரூ.18 முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும், கறுப்பு வெள்ளை மாடு ரூ.24 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரையிலும், ஜெர்சி ரூ.22 ஆயிரம் முதல் 48 ஆயிரம் வரையிலும், சிந்து ரூ.16 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரையிலும், நாட்டுமாடு 72 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது.
வளர்ப்பு கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல், ரூ.14 ஆயிரம் வரை விற்பனையானது.1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று 7,000 ரூபாய் வரையும், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் 6,000 ரூபாய் வரையும் விற்பனையானது.
தீபாவளி பண்டிகை நாட்கள் என்பதால் ஆடுகள் விலை 2,000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. சந்தை தொடங்கிய மூன்று மணி நேரத்தில் ஆடுகள் ரூ.1 கோடிக்கும், மாடுகள் ரூ.1.50 கோடிக்கும் என மொத்தம் ரூ.2.50 கோடிக்கு விற்பனையாகின. கடந்த வாரத்தை விட இந்தவாரம் ஆடு, மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் விலையும் 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தீபாவளி: சென்னையில் புதிய தொழில்நுட்பங்களுடன் 18,000 போலீசார் தீவிர கண்காணிப்பு