ETV Bharat / state

வாகன சோதனையில் சிக்கிய பணத்தை திருப்பி ஒப்படைத்த பறக்கும் படை அதிகாரிகள்!

author img

By

Published : Apr 13, 2019, 8:25 AM IST

ஈரோடு:வாகன சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.42 கோடி பணத்தை, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததையடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.

வாகனத்தணிக்கையில் சிக்கிய பணத்தை திருப்பி ஒப்படைத்த பறக்கும் படை அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டம் குடியாத்தம் கே.வி.குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும்படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரிலிருந்து அந்த வழியாக குடியாத்தம் நோக்கி வந்த வங்கி ஏஜென்சி வேன் ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.1.42 கோடி பணம் இருந்தது தெரியவந்தது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தையும் வாகனத்தையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வங்கி ஏஜென்சி சார்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தையும், பணத்தையும் வங்கி ஏஜென்சியிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

Intro:குடியாத்தம் அருகே வங்கி ஏஜென்சியிடம் ரூ.1.42 கோடி பறிமுதல்

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஆவணங்களை வழங்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர்

Body:தமிழகத்தில் வரும் 10ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குறுதி நடைபெறுகிறது இதையொட்டி தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு இருக்கிறது அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர் இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வங்கி ஏஜென்சியிடம் இன்று ரூ.1.42 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதாவது குடியாத்தம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும்படையினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வேலூரிலிருந்து அந்த வழியாக குடியாத்தம் நோக்கி வந்த வங்கி ஏஜென்சி வேன் ஒன்றை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்டபோது அதில் ரூ.1.42 கோடி பணம் இருந்தது தெரியவந்தது இதையடுத்து அந்த பணத்திற்கான ஆவணங்களை தரும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர் ஆனால் வண்டியில் இருந்த டிரைவர் மற்றும் ஏஜென்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஆவணங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர் இதையடுத்து மொத்தப் பணத்தையும் வாகனத்துடன் அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து வங்கி ஏஜென்சியினர் தங்களது உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கினர். பின்னர் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வங்கி ஏஜென்சி சார்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது இதையடுத்து வேனுடன் அதிலிருந்த பணம் 1.42 கோடியும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது

Conclusion: தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பது தெரிந்து கொண்டே வங்கி ஏஜென்சிகள் இதுபோன்று முறையான ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்வது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.