ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தாகூர் வீதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் மோகன்குமார் (24). இவரும், அவரது நண்பர் முரளிதரனும் இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
பனையம்பள்ளியை அடுத்த சொலவனூர் பெட்ரோல் பங்க் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பண்ணாரியிலிருந்து புஞ்சைபுளியம்பட்டி நோக்கி வந்த கார் அவ்வாகனத்தின் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மோகன்குமார் மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக முரளிதரன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தின்போது காரின் ஏர்பேக் விரிந்ததால், கார் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வெங்கடேசன்(45), அவரது மகன் சுசீந்தர் (16) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
ஹெல்மெட் அணியாததே இளைஞர் உயிரிழப்பிற்குக் காரணம் என விபத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஹெல்மெட் அணியாமல் பலர் தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். உயிரிழப்பைத் தடுக்க, காவல் துறையினர் ஹெல்மெட் அணிவதை உறுதிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: துப்பாக்கியால் சுட்டு துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழப்பு... போலீசார் சந்தேகம்