ETV Bharat / state

வாகன விபத்தில் சிக்கிய அந்தியூர் எம்எல்ஏ - ‌‌தனியார் மருத்துவமனையில் அனுமதி! - a g venkatachalam DMK

ஈரோடு அருகே அந்தியூர் திமுக எம்எல்ஏ சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகன விபத்தில் சிக்கிய அந்தியூர் எம்எல்ஏ - எலும்பு முறிவுகளுடன் ‌‌தனியார் மருத்துவமனையில் அனுமதி!

author img

By

Published : Jul 28, 2022, 12:51 PM IST

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளவர், ஏ.ஜி.வெங்கடாசலம். திமுக எம்எல்ஏவான இவர், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இரவு சுமார் 11.30 மணியளவில் அந்தியூரில் உள்ள தனது வீட்டில் இருந்து, கார் மூலம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வாகன ஓட்டுநர் கார்த்திக் என்பவருடன் புறப்பட்டுள்ளார். அப்போது பவானி அருகே வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் சுமார் 12 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த வளைவில் மழையின் காரணமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாகன விபத்தில் சிக்கிய அந்தியூர் எம்எல்ஏ - எலும்பு முறிவுகளுடன் ‌‌தனியார் மருத்துவமனையில் அனுமதி!
வாகன விபத்தில் சிக்கிய அந்தியூர் எம்எல்ஏ - எலும்பு முறிவுகளுடன் ‌‌தனியார் மருத்துவமனையில் அனுமதி!

இதில் எம்எல்ஏ வெங்கடாசலத்திற்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாகன ஓட்டுநர் கார்த்திக் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் எம்எல்ஏவை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்றவர், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா - கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.