ETV Bharat / state

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் படுகாயம் - suresh

ஈரோடு: அந்தியூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

car-accident
author img

By

Published : Jun 3, 2019, 8:39 AM IST

சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் குடும்பத்துடன் தங்கி நூல் வியாபாரம் செய்துவருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது சொந்த ஊரான கண்ணாமூச்சிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

பின்னர் விடுமுறைக்குப் பிறகு அவிநாசிக்கு குடும்பத்துடன் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அம்மாபேட்டை அருகே உள்ள எஸ்பி கவுண்டனூர் என்னும் இடத்தில், குப்பிச்சிபாளையம் பகுதியில் இருந்து வந்த சுரேஷ் என்பவரின் கார் மீது தேவேந்திரனின் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான கார்

இந்த விபத்தில் தேவேந்திரன், அவரது மனைவி கீதா, மகள் சுனிதா, மகன் ஜீவன், மைத்துனர் மெய்யழகன் படுகாயமடைந்தனர். இதேபோல் எதிரே மோதிய காரில் இருந்த சுரேஷ் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

பின்னர் அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை காவலர்கள், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஈரோடு 02.06.2019
சதாசிவம்

. ஈரோடு மாவட்டம்
அந்தியூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்...                                                                  
 சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன்.
இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் குடும்பத்துடன் தங்கி நூல் வியாபாரம் செய்து வருகிறார்.  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை  என்பதால் தனது சொந்த ஊரான கண்ணாமூச்சிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.
 பின்னர் காரில் அவிநாசி  திரும்பி செல்லும் போது அம்மாபேட்டை அருகே உள்ள எஸ்பி கவுண்டனூர் என்ற இடத்தில்  சென்றபோது எதிரே குப்பிச்சிபாளையம் பகுதியில் இருந்து சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் மீது தேவேந்திரனின் கார் நேருக்கு நேர் மோதியது..இந்த விபத்தில்
தேவேந்திரன் அவரது மனைவி கீதா மகள் சுனிதா மகன் ஜீவன் மைத்துனர் மெய்யழகன் மற்றும் எதிரில் வந்த காரில் 2 நபர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்தியூர் மற்றும் ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

visual send ftp..FILE NAME :TN_ERD_02_02_ACCIDENT_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.