ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பவளக்குட்டை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சங்கரியைச் சேர்ந்த ராணி(33), குமாரபாளையத்தைச் சேர்ந்த பெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம்