ஈரோடு அருகே வசித்து வந்த ஓட்டுநர் தீனதயாளன், கணவரை இழந்த பெண் ஒருவருடன் வசித்து வருகிறார். இப்பெண்ணிற்கு எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. விடுதியில் தங்கிப் படித்தவந்த அந்த சிறுமி கரோனா ஊரடங்கு காரணமாக தாயுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக தீனதயாளன், தொடர்ந்து வீட்டிலுள்ள சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வன்கொடுமை செய்துள்ளார்.
இதற்கிடையில் தொடர்ந்து வயிற்றுவலியில் துடித்த தன்னுடைய மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் குழுவினர் தெரிவித்தனர். மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் தேன்மொழி, தீனதயாளன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, போக்சோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீனதயாளன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!