பவானிசாகர் அணை கட்டுமான பணியின்போது கட்டுமான பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக, பவானி சாகர் அணை முன் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.
இந்தப் பாலம் சமீபத்தில் பழுதடைந்து வாகனங்கள் இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால், அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால், கிராம மக்கள் புதிய பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நான்கு மாதங்களுக்கு முன்பு பவானி ஆற்றின் குறுக்கே சுமார் ஏழு கோடி ரூபாய் செலவில் புதிய பாலத்துக்கான கட்டுமான பணி தொடங்கியது.
இந்தப் பாலத்திற்கான தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் வெளியேற்றம் அளவும் அதிகரித்துள்ளது.
எனவே, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தினால், பாலம் கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
எனினும், வெள்ள நீர் சீராக செல்வதற்கு ஏற்ப புதிய பாலத்திற்கு அடியில் ஜேசிபி மூலம் தூர்வாரும் பணியும் நடைபெற்றுவருகிறது.