கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அஞ்சூர் அடுத்த குழந்தைபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (30). இவர் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள வடுகப்பட்டி அ, கிராமத்தில் விஏஓவாக பணிபுரிந்து வருகிறார். அரச்சலூர் அடுத்த வடுகப்பட்டி, வடக்கு வீதியை சேர்ந்த புவனேஸ்வரி (35) இவரது கணவர் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனையடுத்து வடுகப்பட்டியில் உள்ள வீட்டை பட்டா மாறுதல் செய்வதற்காக புவனேஷ்வரி விஏஓ., வெற்றிவேலை அணுகியுள்ளார் அவரிடம் பட்டா மாறுதல் செய்து தருவதற்கு 40 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதில் பேரம் பேசி இறுதியாக ரூ.30 ஆயிரம் ரூபாய் தருவதாக புவனேஸ்வரி கூறியதாக தெரிகிறது.
ஏற்கனவே ரூ.19 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றுக்கொண்ட அவர் மீதித் தொகையை கேட்டு அடிக்கடி புவனேஸ்வரியை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புவனேஸ்வர் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து, புவனேஸ்வரி ரூ.10 ஆயிரம் ரூபாய் பணத்தை விஏஒ., வெற்றிவேலிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெற்றிவேலை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரித்துவருகின்றனர்.