ஈரோடு: ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் மோகன்ராஜ், தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். மோகன்ராஜ் எப்போதும் தனது செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிவந்துள்ளார்.
இதனைப் பார்த்த மோகன்ராஜின் தந்தை மூர்த்தி கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, சிறுவனைக் கண்டித்து, அவரது செல்போனைப் பிடுங்கி வைத்துக்கொண்டுள்ளார்.
![free fire free fire game boy suicide for free fire game erode boy suicide for free fire game erode news suicide erode latest news ஈரோடு செய்திகள் தற்கொலை ஃப்ரீ ஃபையர் கேம் ஃப்ரீ ஃபையர் ஈரோடில் பறித்த ஃப்ரீ ஃபையர் கேமால் சிறுவன் தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13304024_suicide.jpg)
இதனால் கடந்த மூன்று நாள்களாகவே சிறுவன் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 8) மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்,
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனின் தந்தை மூர்த்திக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து இது குறித்து தகவலறிந்த கருங்கல்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு: 7 பேர் கைது