ETV Bharat / state

18 நாட்களாக ஒரே நீர்மட்டத்தில் நீடிக்கும் பவானிசாகர் அணை! - சம அளவு

ஈரோடு: நீர்வரத்து மற்றும் பாசனத்திற்கு நீர்திறப்பு சம அளவில் உள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 18 நாட்களாக 94 அடியிலேயே நீடித்துவருகிறது.

bhavanisagar dam
author img

By

Published : Sep 3, 2019, 3:50 PM IST

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் 63 அடியாக இருந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பதற்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 94 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனத்திற்கு நீர் திறக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதைத் தொடர்ந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியும், கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த 16ஆம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஒரே நீர்மட்டத்தில் நீடிக்கும் பவானிசாகர் அணை!

இதன் காரணமாக அணையிலிருந்து அதிகபட்சமாக 1350 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடி நீரும் என மொத்தம் 3650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் அணைக்கு நீர்வரத்தும், பாசனத்திற்கு நீர் திறப்பும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த 18 நாட்களாக 94 அடியிலிருந்து குறையாமல் அதே நிலையில் நீடிக்கிறது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.90 கன அடியாகவும், நீர் இருப்பு 24.2 டிஎம்சியாகவும் உள்ளது.

Intro:Body:tn_erd_02_sathy_dam_inflow_vis_tn10009

நீர்வரத்து மற்றும் பாசனத்திற்கு நீர்திறப்பு சம அளவில் உள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 18 நாட்களாக 94 அடியில் நீடிக்கிறது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மற்றும் பாசனத்திற்கு நீர் திறப்பு சம அளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் இரு வாரங்களாக 94 அடியாக நீடிக்கிறது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் 63 அடியாக இருந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஆகஸ்ட் 5 ம் தேதி முதல் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 94 அடியை எட்டியது. இந்நிலையில் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனத்திற்கு நீர் திறக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதை தொடர்ந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதியும் கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த 16 ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக அணையிலிருந்து பவானி ஆற்றில் அதிகபட்சமாக 1350 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடி நீரும் என மொத்தம் 3650 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் அணைக்கு நீர்வரத்தும் பாசனத்திற்கு நீர் திறப்பும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த 18நாட்களாக 94 அடியிலிருந்து குறையாமல் அதே நீர்மட்டத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.90 கன அடியாகவும், நீர் இருப்பு 24.2 டிஎம்சி யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 3954 கன அடியாகவும், அணையிலிருந்து பாசனத்திற்காக பவானி ஆற்றில் அதிகபட்சமாக 1350 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடி நீரும் என மொத்தம் 3650 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.