ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் அதன் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணை மூலம் இரண்டு லட்சத்து 47 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு முக்கிய நீர்வரத்தாக பவானிஆறு, மாயாறு உள்ளன.
அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தெங்குமரஹாடா, நீலகிரி, கேரளாவின் ஒரு பகுதியிலும் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 96 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த அக். 22ஆம் தேதி 102 அடியை தொட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே சீராக 102 அடியாக நீடித்த நிலையில் அணையின் நீர்மட்டம் நேற்று 104.65 அடியை எட்டியது. 1979ஆம் ஆண்டுக்கு பிறகு நேற்று 104.65 அடியை எட்டியுள்ளது.
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மண்அணை என்பது மட்டுமின்றி தமிழ்நாட்டில் அதிக கொள்ளளவு கொண்ட இரண்டாவது அணை என்பது பவானிசாகர் அணையின் சிறப்பு. இந்த அணை 10.34 கோடி செலவில் 1955ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது கல்லணை. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1620 சதுர மைல்கள், நீர் தேக்கப்பகுதி 30 சதுர மைல்கள்.
அணை கட்டிமுடிக்கப்பட்ட காலத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1979ஆம் ஆண்டுக்குப் பின்னர் நேற்று 104.65 அடியை எட்டியது. அணையில் 464 மீட்டர் அகலம் கொண்ட கல்லணையும் இதன் இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட 8.3 மீட்டம் மண்அணையும் தற்போதும் சிறத்தன்மையுடன் இருப்பதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதிய தொழில்நுட்ப வசதியில்லாத நிலையில் அணையின் 104.65 எட்டிய நிலையில் மண்கரையில் ஒரு கசிவு கூட ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு உறுதியுடன் உள்ளது பெருமைக்குரியது. கல்லணையில் உள்ள மேல் மதகிலிருந்து வரும் கசிவுநீர் கூட குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக இருப்பதும் இதன் சிறப்பு.
நவம்பர் 7ஆம் தேதி நிலவரம்: அணையின் நீர்மட்ட உயரம் 104.55 அடி, நீர்வரத்து 678 கனஅடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு 2900 கனஅடி, நீர் இருப்பு 32.42 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க: 'உழவுக்கு உதவும் டி.வி.எஸ்.50' - ஆந்திர விவசாயியின் அசத்தல் ஐடியா!