ETV Bharat / state

102 அடியை எட்டிய பவானிசாகர் அணை

இந்தாண்டில் இரண்டாவது முறையாக 102 அடியை எட்டியது பவானிசாகர் அணை. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வாய்க்கால் மற்றும் பவானிஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

bhavanisagar
bhavanisagar
author img

By

Published : Oct 5, 2021, 7:51 PM IST

ஈரோடு : நீலகிரி மாவட்டத்தில் சில நாள்களாக பெய்த கன மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 105 அடி கொள்ள்ளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று 102 அடியை எட்டியது.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணி அணைகளின் விதிதொகுப்புபடி அக்டேபர் மாதம் 102 அடிக்கு மேல் வெள்ளநீரை தேக்கி வைக்க இயலாது என்பதால் அணைக்கு வரும் 4 ஆயிரத்து 600 கனஅடி உபரிநீர் அப்படியே ற்று மதகில் திறந்துவிடப்பட்டது.

அதாவது கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடிநீரும், பவானிஆற்றில் 2300 கனஅடி நீரும் என 4600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானிஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வருவாய் மற்றும் காவல்துறை சார்பில் ஆற்றில் துவைக்கவே, குளிக்கவோ கூடாது என்றும் தாழ்வான பகுதியில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

பவானிஆற்றில் திறந்துவிடப்படும் வெள்ளநீர் பவானிசாகர், சத்தியமங்கலம், பெரிய கொடிவேரி, வழியாக பவானிகூடுதுறை சென்றடைந்து காவிரி ஆற்றில் கலப்பதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 1955ஆம் ஆண்டு பவானிசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து 20ஆவது முறையாக அணை 102 அடியை எட்டியுள்ளது.

அதாவது இந்தாண்டில் ஆகஸ்ட் 30ஆம் தேதி 102 அடியை எட்டியதற்கு பின் இன்று 2ஆவது முறையாக அணை நிரம்பியது. இதனால் கீழ்பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 3500 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணை 102 அடியை தொட்டதால் நீர்ப்பிடிப்பு பகுதி கடல்போல காட்சியளிக்கிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடி, நீர்வரத்து 4600 கனஅடியாகவும், அணைக்கு வரும் 4600 கனஅடி உபரிநீர் கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடிநீரும் பவானிஆற்றில் 2300 கனஅடி என மொத்தம் 4600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 30.30 டிஎம்சி ஆக உள்ளது.

இதையும் படிங்க : கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.