ETV Bharat / state

கனமழை காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து 6,700 கன அடி நீர் திறப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து பவானி ஆற்றில் 6700 கன அடி நீர் திறக்கப்பட்டது.

கனமழை காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து 6700 கன அடி உபரி நீர் திறப்பு

author img

By

Published : Aug 5, 2022, 11:09 AM IST

ஈரோடு: 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பெய்த கன மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6774 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணியளவில் 102 அடியை எட்டியது.

கனமழை காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து 6700 கன அடி உபரி நீர் திறப்பு

105 அடி உயரம் உள்ள பவானிசாகர் அணையில் அக்டோபர் மாத இறுதி வரை 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. நீர்வளத்துறை அலுவலர்கள் பவானிசாகர் அணையில் இருந்து மதகுகள் மூலம் விநாடிக்கு 6700 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர்.

இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6700 கன அடியாக உள்ளதால் அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்ட போதிலும் கரையோர பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈரோடு மாவட்டத்தில் பள்ளி வாளகத்துக்குள் புகுந்த வெள்ளம்; மாணவர்கள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.