ETV Bharat / state

விவசாயியின் முகத்தை சிதைத்த கரடி! - kovai

கோவை: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பவளக்குட்டையில் கரடி தாக்கியதில் விவசாயியின் முகம் சிதைந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

bear attack
author img

By

Published : Aug 6, 2019, 12:14 PM IST

சத்தியமங்கலம் அடுத்த பவளக்குட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பரப்பட்டாவில் உள்ள தனது தோட்டத்துக்கு விவசாயப் பணிக்காக நடந்து சென்றுகொண்டிருந்த-போது புதர்மறைவிலிருந்த கரடி திடீரென அவர் மீது பாய்ந்து சரமாரியாக தாக்கத் தொடங்கியது.

இந்தத் தாக்குதலில் வலி தாங்கமுடியாமல் ஆறுமுகம் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டுவந்தனர். இதையடுத்து, கரடி அங்கிருந்து தப்பியோடியது.

கரடி தாக்கி விவசாயியின் முகம் சிதைந்தது

இதில், முகம் சிதைந்த நிலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் 108 அவசர ஊர்தியில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

பவளக்குட்டை கிராமத்தையொட்டி இச்சம்பவம் நடந்துள்ளதால் கிராம மக்கள் கரடி மீண்டும் ஊருக்குள் வராதபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:tn_erd_03_sathy_karadi_attack_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே கரடி கடித்து குதறியதில் விவசாயி ஆறுமுகம் முகம் சிதைந்தது: கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பவளக்குட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் கரடி தாக்கியதில் முகம் சிதைந்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சத்தியமங்கலம் அடுத்த பவளக்குட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(49). விவசாயி. இவர் பரப்பட்டாவில் உள்ள தனது தோட்டத்துக்கு விவசாயப் பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர்மறைவில் இருந்த கரடி திடீரென ஆறுமுகத்தை பிடித்து தாக்கியது. கரடியின் பிடியில் இருந்து தப்பிமுடியாமல் போராடினார். கரடி கட்டிப்பிடித்து அவரது முகத்தை கடித்துக்குதறியது. அவரது அலறல் சப்தம் கேட்டு அவ்வழியாக சென்ற கிராமமக்கள் ஒன்று திரண்டு சப்தம் போட்டனர். இதனால் பயந்துபோன ஆறுமுகத்தை விட்டுவிட்டு தப்பியோடியது. முகம் சிதைந்த நிலையில் பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலனஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பவளக்குட்டை கிராமத்தையொட்டி சம்பவம் நடந்துள்ளதால் கிராமமக்கள் கரடி மீண்டும் ஊருக்குள் புகாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.