ETV Bharat / state

காலிங்கராயன் கால்வாயைப் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

author img

By

Published : Jan 19, 2020, 12:57 PM IST

ஈரோடு: காலிங்கராயன் கால்வாயை சாயக்கழிவு உள்ளிட்ட மாசுக்களிலிருந்து பாதுகாத்திட வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மினி மாரத்தான் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Awareness Marathon
Awareness Marathon

விவசாயிகளின் பாசனத் தேவைக்காகவும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காகவும் கடந்த 738 ஆண்டுகளுக்கு முன்னர் 90 கிலோ மீட்டர் தூரம் கட்டப்பட்ட காலிங்கராயன் கால்வாய் பயன்பாட்டிற்கு விடப்பட்ட நாளான தை மாதம் 5ஆம் தேதி ஆண்டுதோறும் காலிங்கராயன் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஈரோடு மாவட்டம், பவானி மேட்டுநாசுவம்பாளைத்தில் தொடங்கி, கரூர் மாவட்டம் நொய்யலில் கலக்கும் காலிங்கராயன் கால்வாய் நீரில் சாயம், தோல் கழிவுகள் கலப்பதால், மாசுபட்டு நோய் பரப்பும் நீர் நிலையாக மாறியுள்ளது.

இந்நிலையை மாற்ற விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், போராடியும் வரும் நிலையில் காலிங்கராயன் தினமான இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது.

எஸ்.எஸ்.வி. பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் கொடுமுடி, சிவகிரி, கொளாநல்லி பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தனியார், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

காலிங்கராயன் கால்வாயைப் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

இதனையடுத்து மினிமாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. காலிங்கராயன் கால்வாய் 50 ஆண்டுகளுக்கு முன்னிருந்து தூய்மையான கால்வாயாக மாற்றுவதற்கு தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மினிமாரத்தான் போட்டிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: முதல் நிமிடத்திலேயே கோல்... நெதர்லாந்தை பழிதீர்த்த இந்தியா!

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன19

காளிங்கராயன் கால்வாயை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

தொன்மையான காளிங்கராயன் கால்வாயை சாயக்கழிவு உள்ளிட்ட மாசுக்களிலிருந்து பாதுகாத்திட வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பள்ளி மாணவ,மாணவியர்களிடையே நடைபெற்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் பாசனத் தேவைக்காகவும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காகவும் கடந்த 738 ஆண்டுகளுக்கு முன்னர் 90 கிலோ மீட்டர் தூரம் கட்டப்பட்ட காளிங்கராயன் கால்வாய் பயன்பாட்டிற்கு விடப்பட்ட நாளான தை மாதம் 5ம் தேதி ஆண்டுதோறும் காளிங்கராயன் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஈரோடு மாவட்டம் பவானி மேட்டுநாசுவம்பாளையம் தொடங்கி கரூர் மாவட்டம் நொய்யலில் கலக்கும் காளிங்கராயன் கால்வாய் சாயம் மற்றும் தோல் கழிவுகளால் மாசுபட்டு நோய் பரப்பும் நீர் நிலையாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்ற விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், போராடியும் வரும் நிலையில் காளிங்கராயன் தினமான இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காளிங்கராயன் கால்வாயை காப்பாற்றிட வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது.

எஸ்.எஸ்.வி. பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் கொடுமுடி, சிவகிரி, கொளாநல்லி பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவியர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Body:மினி மாரத்தான் போட்டியின் போது விவசாயிகளின் நிலங்களை பொன்னாக மாற்றிய காளிங்கராயன் கால்வாய் கழிவுகளாலும், குப்பைகளாலும் மாசுபட்டு வருவதை மீட்டெடுத்திட வேண்டும் என்றும், புற்றுநோய், ஆண்,பெண் மலட்டுத்தன்மைக்கு காரணமான காலிங்கராயன் கால்வாயை நோய்த்தன்மையற்ற நீர் நிலையாக மாற்றிட வேண்டும், காளிங்கராயன் கால்வாய் செல்லும் பகுதிகளில் அதிகரித்து வரும் மருத்துவமனைகள், மருந்தகங்கள் எண்ணிக்கையை குறைத்திடுவதற்கான முயற்சியை அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

Conclusion:மினிமாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. காளிங்கராயன் கால்வாய் 50 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தூய்மையான கால்வாயாக மாற்றுவதற்கு தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மினிமாரத்தான் போட்டிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.