ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள அந்தியூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கொண்டையம்பாளையம், பெருமுகை, துறையம்பாளையம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தார் சாலை மேம்பாடு, தனிநபர் குடிநீர் இணைப்பு, கான்க்ரீட் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான தொகுதி வளர்ச்சி திட்டப் பணிகளை, அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் பூமிபூஜையுடன் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
முன்னதாக கள்ளிப்பட்டியில் நடைபெற்ற விழாவில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாகக் கட்டப்படும் கலையரங்கம் கட்டுமானப்பணியையும் அவர் பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கன்வாடிகளுக்கு சமையல் பாத்திரங்களை வழங்கி அங்கிருந்த பொது மக்களுக்கு அன்னதானம் விநியோகம் செய்தார்.
அப்போது அவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் அந்தியூர் தொகுதிக்குத் தேவையான திட்டங்களை முன் நின்று செயல்படுத்தி வருவதாகவும், தொகுதிக்கு எப்போது அழைத்தாலும் இருவரும் உடனடியாக வந்து மக்களை சந்திப்பதாகவும்” தெரிவித்தார்.
4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ
ஈரோடு : அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.